Tuesday, 21 January 2025

மனிதன் தரா ஞானம்

"மண்ணைத் திண்ணும்        புழுவைத் திண்ணும்                    மீனைத் திண்ணும்                    கொக்கைத் திண்ணும்              மனிதனைத் திண்ணும்    

மண்"                                                                                                                                                                                                                                    மனிதர் தராத ஞானம் 

மண் தரும் நமக்கு. 

மண் எல்லாவவற்றையும் செரித்து  விடுகிறது.

மண் நிறத்தாலும், பண்புகளாலும் வேறுபட்டு இருக்கிறது. 

மண் நமக்கு சொல்லித் தரும் பாடங்கள் எல்லாக் காலத்திலும் ஒரே  மாதியாகத் தான் இருக்கிறது.  

மண் மேலே வாழும் போதும், மண்ணுக்குப் போகும் போதும் உபயோகமாய் இருப்பது எப்படி என்று தன் பண்புகளால் பாடம் நடத்திவிட்டுப் போகிறது.                                                                                                                                  நம் எல்லா வகை உணர்ச்சிகளாகட்டும், செல்வங்களாகட்டும், அவற்றைச் சேமிக்கின்ற முறையாகட்டும், 

செலவு செய்யும் விதங்களாகட்டும் மண் நமக்கு முன்னத்து ஏராய் இருக்கிறது.                                                                                                                                                                           களிமண் தமக்குள் சேர்த்து வைத்த எதையுமே வெளிவிடாத கஞ்சனாய் இருக்கிறது. என்னைப் போல வாழ வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லுகிறது. இதற்கு களிமண் என்பதற்குப் பதில் கஞ்ச மண்ணுனு பேர் வச்சிருந்தா சரியா இருந்திருக்கலாம்.

மற்றவற்றவர்களோடு எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது.                                                                                                                            மணல் இதற்கு சேமித்து வைப்பதைவிட செலவு செய்வதில் அதிக ஆர்வம்.       நம்மிடம் இருக்கின்ற உணர்ச்ச்சிகளாகட்டும், உணர்வுகளாகட்டும் அவ்ற்றை செலவு செய்யு விதங்களாகட்டும் மணலைப் போல் இருந்துவிடக் கூடாது.         மணல் ஒருவகையில் ஓட்டைப் பானை.                                                                                                                                                    தோட்டத்து மண் 

தனக்குத் தேவையான தண்ணீரை சேமித்துக் கொண்டு தேவையில்லாதவற்றை வெளியேற்றி விடும். நாம் பிறர் மீது காட்டும் எல்லா வகை உணர்ச்சிகளாகட்டும், சேர்த்து வைக்கிற செல்வங்களாகட்டும், அவற்றைச் செலவு செய்யும் விதங்களாகட்டும் தோட்டத்து மண் இப்படி இருக்க வேண்டும் என்று  நமக்கு உதாரணமாய் இருக்கிறது..                                                                                                                            எத்தனையோ மனிதர்கள் இருந்தாலும் எல்லோரும் நம்மை பாதிப்பது இல்லை. அதைப் போலவே மண்களும். நம் வாழ்க்கையை பாதிக்கின்ற, பண்படுத்துகின்ற மண்களைப் பற்றி மட்டுமே இங்கு பேசி இருக்கிறேன்.                                                                    உழவர்கள் மண்ணுக்கு மரியாதை செய்யும் இந்தப் பொங்கல் திருநாளில்    "மண் உற்பத்தி செய்யும்  உண(ர்)வுகளை உண்டு வளர்வோம்!!!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              

Friday, 19 January 2024

உழவு

அனைவருக்கும் வணக்கம்.
உழவு தலைப்பை முதலில் வைத்திருக்க வேண்டும் என்று விழாத் தலைவர் கூறினார் 

மேலிருந்து பார்த்தால் நான் தான் கடைசி. 
கீழிருந்து பார்த்தால் 
நான் தான் முதல் 

உலகின் முதல் தொழிலும் உழவு தான்.
உலகின் கடைசித் தொழிலும் உழவு தான் 

பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின் 352 வது நிகழ்வு. 
திரு தர்மராஜ் அவர்களின் நினைவு 

இந்த கவிச் சமூகம் 
திரு சண்முகம் ஐயா 
அவர்களின் பின் செல்லும்

தேநாவின் தேன் நாவும் பேனா தான்.
தே நாவின் பேனாவும் தேன் தான் அவரின் அறிமுக உரைக்கு நன்றி.

நல்ல வார்த்தைகளால் பின்னி வரவேற்புரை வழங்கிய சென்னியப்பன் அண்ணாவுக்கும் நன்றி.

பூப்போன்று பா எழுதும் மதிப்பிற்குரிய திரு மா.பாபு விழாத் தலைவர் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்

தன் மணிமொழியால் நன்றியுரை சொல்லப் போகும் திருமதி மணிமொழிக்கும் வணக்கமும் நன்றியும்

வள்ளுவமே வாழ்வியலாய் வாழ்வியலே வள்ளுவமாய் என்ற வள்ளுவர் தின கவியரங்கத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு உழவு

12 மாதங்களும் உழவுத் தொழில் வேண்டும் என்று நினைத்துத்தான் 12 தலைப்புகள் வைத்தீர்களா? 
அதில் 12வது தலைப்பாக உழவை வைத்தீர்களா?


இந்த வாழ்வில் தன் சுற்றுப்பாதையில் இருந்து விலகிச் செல்லும் நபர்களை எல்லாம் இரண்டடி கொடுத்து மீண்டும் பழைய பாதையில் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்த வள்ளுவம்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றான். பாரதி அதில் கூட உழவை முதலாவதாக வைத்தான்.

வள்ளுவர் ஒரு படி மேலே போய் 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் 
தொழுதுண்டு பின் செல்வார் என்றார்
ஒரு முறை சர்தார் வல்லபாய் பட்டேல் வெளிநாடு சென்றிருந்தபோது அங்கிருந்தவர்கள் எல்லாம் கேட்டார்களாம் உங்களுடைய கல்ச்சர் என்னவென்று கேட்டார்களாம்.

பட்டேல் அக்ரி கல்ச்சர் என்றாராம்.

அதிக பொருளுக்கு குறைந்த வரி விதித்தவர் திருவள்ளுவர் தான்.
அவரே சிறந்த பொருளாதார நிபுணர்

குறள் வள்ளுவருடையது. 
குரல் என்னுடையது.

உங்கள் மனநலத்தில் கவிதை நாறங நடப் போகிறேன் அதில் இருக்கும் களைகளை போகி ஆக்கிடுங்கள்.

 நல்லவற்றை அறுவடை செய்து உங்கள் மகிழ்ச்சி பொங்கலில் சேர்த்துக் கொள்ளுங்கள் 

உங்களின் கைதட்டல் எனக்கு கரும்பு.

ஏரோபிளேன் உற்பத்தி செய்தாலும், பின்னூசி உற்பத்தி செய்தாலும் ஏர்தான் அனைத்து தொழிலுக்கும் முன்னத்து ஏர்.

பசி போக்குவதால் உழவுத் தொழிலில் துன்பம் கூட இன்பம் தான்.

அச்சுத் தொழிலாக இருந்தாலும், ஆணித் தொழிலாக இருந்தாலும் உழவு தான் அச்சாணி என்று எழுத்தாணி கொண்டு சொன்னான் வள்ளுவன் ஞானி 

வரம் தா என்று கேட்டாலும் தொழுதாலும் இறைவன் வரம் தருவாரா என்று தெரியாது.

 ஆனால் கேட்காமலேயே தாவரங்கள் மூலம் வரம் தருபவன் உழவன் தான். 
அவனே தொழத் தகுதியானவன்‌

அத்தனை தொழில்களையும் தன் குடையின் கீழ் வைத்திருக்கும் அரசு.
அந்த அரசையே தன் குடையின் கீழ் வைத்திருப்பான் உழவன்

பிறரிடம் தன் கை மேல் நோக்கி வாழ மாட்டான் உழவன்.
 அதே நேரம் தன்னிடம் வரும் மேல்நோக்கும் கைகளுக்கு தன் கைகள் கீழ்நோக்கி உதவிடுவான். 

நமக்கு நாமே திட்டத்தின் விதை உழவன்

எல்லா பற்றையும் கைவிட்டு விட்டதாக கூறிய பழைய துருவிகளும், 
எல்லாப் பற்றையும் விட்டு விட்டதாக கூறி நிறைய வரவுகளை பற்று வைத்துக் கொண்டிருக்கும் புதிய துறவிகளும் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை எதிர்பார்த்து தான் வாழ்ந்தாக வேண்டும்

மண்ணாங்கட்டி மண்ணாகும் வரை உழு அது பொன்னாகும். 

உரம் இன்றி பயிர் வளரும். 

ஒன்றை சிறப்பாக செய்தால் இன்னொன்று தேவை இருக்காது.
 
பயிற்சியும் முயற்சியும் உழவனின் இரு கண்கள் மட்டுமல்ல... இரு காளைகளும் கூட..

உழ முடியாதவன் உரம் இடலாம். களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் நல்லது.

அதைவிட நல்லது அந்த பயிரை உயிர் போல் காப்பது.

எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள் அன்போடு பரிமாறுங்கள் என்பதைப் போல எப்படி வேண்டுமானாலும் பயிர் வளர்த்தாலும் அதை உயிர் போல் காத்திடுவான் உழவன்‌

வீட்டில் இருக்கும்போது காடு 
வா வா என்று அழைக்க வேண்டும்.
வீடு (மனைவி) போ போ என்று சொல்ல வேண்டும்

காட்டில் இருக்கும் போது வீடு வா வா என்று அழைக்க வேண்டும்.காடு போ போ என்று சொல்ல வேண்டும்.

நாள்தோறும் கவனிக்காவிட்டால் வீடும் காடும் விளைச்சலை தராது

வேறு தொழில் செய்பவர்கள் வாழ வழி இல்லை என்று சோம்பலாய் இருக்கலாம்.

நிலம் வைத்திருப்பவன் மற்றவர்களுக்கெல்லாம் சாம்பலா இருக்க வேண்டும்

சோம்பலை தன்னோடு வைத்திருந்தால் பூமியாளும் இல்லாளும் சேர்ந்து கேலி செய்வார்கள்.


உலகின் அட்சய பாத்திரம் உழவு.

உழவன் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்

நான் இப்போது கவிதையை கீழே வைக்க விட்டாலும் உங்களால் சோற்றில் கை வைக்க முடியாது.

உணர்வில் சந்தித்தோம் இனி உணவில் சந்திப்போம்.

இத்தனை உழைப்புகளும் ஒரு சாண் வயிற்றுக்கு தான் என்பது பழைய மொழி.

இத்தனை பாடுகளும் ஒரு முழம் வயிறு(தொப்பை) உள்ளவர்களுக்கும் தான்

கடைசியாய் ஒன்று உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
 வீணில் உண்டு களி(ழி)த்திருபோரை 
வாக்கிங்காவது போகச் சொல்வோம்.

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் நன்றி







Monday, 15 January 2024

தைப் பொங்கல் 2024

 விளை நிலங்கள் 

எல்லாம் 

விலை நிலங்கள் 

ஆகிப் போனாலும் 

வந்ததை 

போனதைப் 

பற்றியும் 

வந்த 'தை'

போன 'தை' 

பற்றிக் கவலைப்படாமலும் அதிக வாடிக்கையாளர்களுடன் இயங்கியும் 

இழப்புகள் 

வந்தாலும் 

இன்முகத்துடனே

 உழவுத் தொழில் 

நீடிப்பதால் 

துன்பங்கள் 

எல்லாம் போகி 

ஆகிறது. 

இன்பங்கள் எல்லாம் பொங்கலாகிறது.


மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்...!!!

Saturday, 14 January 2023

தமிழர் திருநாள் பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம் 13.01.2023

அவையில் அமர்ந்திருக்கும் ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் என்னைப் போன்றோருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம்.

 பேச்சில் நல்லது இருந்தால் கைதட்டு கம்பன் கலை மன்றமே. 

அல்லது இருந்தால் அதை களை மன்றமே.


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை  மாடுதனை மறந்த மகற்கு 


மாடின்றி அமையாது உழவும், உலகும் 


உலகின் முதல் தொழிலாக இருந்ததும் கடைசி தொழிலாக  இருப்பதும் உழவுத் தொழில் 

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர் திருநாளில் மாட்டுப்பொங்கல் மையமானது.


மனிதனின் உணவுத் தேவையை நிவர்த்தி செய்த மாடுகளுக்கு உணர்வால் நன்றி சொல்வதே  மாட்டுப் பொங்கல்.

பட்டி நோன்பு என்றாலே பட்டி தொட்டி எல்லாம் தெரியும்.


ஆடிப்பட்டம் தேடி விதைத்து                ஓடி ஓடி தினம் உழைத்து 

மார்கழியில் மகிழ்வுடனே அறுவடை செய்து தையிலே நம் கையிலே வருவதைத்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறோம்.


விளைவித்ததை உணவுக்கும், விற்பனைக்கும், மன்னருக்கு வரி செலுத்தவும் தயாராக இருப்பதையே தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறோம்.


புது அரிசி

புது பானை 

புதுவிறகு 

புது உணவு இவற்றால் புது உணர்வு பிறக்கும்.

ஆம்.

தை பிறந்தால் வழி பிறக்கும்.


பாங்கு உடனே பட்டிக்கட்டி 

பட்டிக்கு காப்பு கட்டி.             அதற்குள்ளே தெப்பக்குளம் கட்டி வெங்கச்சங்கல் சாமி வச்சு கரும்போடு அரும்பும் வைத்து மங்கலமாய் மஞ்சள் கொத்து வைத்து காதோலை கரும்பாசி கருத்துடனே சேர்த்து வைத்து வாழையடி வாழையாக வாழைக் கன்றை          நட்டு வைத்து 

முடக்கத்தான் கொடியை கூட வைத்து

தெப்பக்குளத்தில் காசுகள் வீசி கார்த்திகை விளக்கேற்றி கருணையோடு நன்றி சொல்கிறோம்


ஆடியில் விதைத்த நெல்லை மார்கழியில் மகிழ்வோடு அறுவடை செய்து தையிலே புத்தரிசியாக்கி 

புது பானையில் இட்டு 

புதுவிறகால் பொங்க வெச்சு பொங்கி வரும் போது உறவுகளோடு பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு நன்றி சொல்கிறோம் 


மொச்சை கொட்டை குழம்பு வச்சு அரசாணி காயை அருமையாய் சமைத்து                                         கொள்ளு பருப்பு கூட வைத்து


மாட்டை குளிப்பாட்டி தொழுவத்தை தூய்மை செய்து கொம்புகளை வண்ணமாக்கி 

மூக்கணாங் கயிறோடு கைப்பிடி கயிறையும் மாற்றி 


பூ நிறைய கொண்டு ஆநிரையை அலங்கரித்து 

சந்தனம் குங்குமம் இட்டு 

காலில் சலங்கை கட்டி 

வெள்ளை வேட்டி முதுகில் வைத்து 

அதிலே மாவிளக்கு வைத்து 

பட்டியை சுற்றி வந்து 

அரசனம்பட்டியாரே அரசனம்

 வாய் பூசு வட்டியாரே வாய் பூசு

உன்னுன்னு பட்டியாரே உன்னுன்னு  

வாய் கழுவு பட்டியாரே வாய்கழுவு என்று சொல்லி பட்டியை வலம் வந்து மாட்டுக்கு உணவு ஊட்டி 

பிறகு 

 புழுதி காட்டுக்குள்ளே வாழை இலையில் பரிமாறி உணவு உண்ணும் போது உணர்வோடு நன்றி சொல்கிறோம்.

உணவும் உண்ட பின் மயிர் கோதி தானும் கொண்டு வெங்கலத் தட்டத்திலே ஒலி எழுப்பி மாட்டை தெப்பக்குளத்தில் மிதிக்க வைத்து தொழுவத்தில் சேர்க்கின்றோம்.


எருது கழனியில ஏரைத் தழுவுகிறது.

வீரத்தில் ஏறு தழுவுகிறது.


விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்கள் ஆகிப் போனாலும் வந்ததை போனதைப் பற்றி கவலைப்படாமலும் 

வந்த தை 

போன தையைப் பற்றி கவலைப்படாமலும் அதிக வாடிக்கையாளரைக் கொண்டு இயங்கும் ஒரு தொழிலாக இருந்தாலும் இழப்புகள் வந்தாலும் இன்முகத்துடனே உழவுத் தொழில் நீடித்து வருவதால் நம் துன்பங்கள் எல்லாம் போகி ஆகிறது. இன்பங்கள் எல்லாம் பொங்கலாகிறது.


வாழ்த்துகளுடன் குமார்.




Wednesday, 17 September 2014

                                                                         ஆசிரியர் தின வாழ்த்துகள்
                                                                                                    அகரத்தைக் கற்பிக்கும் பணி
                  ஆண்டவனுக்கு ஈடான பணி
                  இல்லாமையைப் போக்கும் பணி
                  ஈடில்லா ஆசிரியப் பணி
                  உண்மையை உரைக்கும் பணி
                  ஊக்கத்தை கொடுக்கும் பணி
                  எண்ணங்களுக்கு வண்ணம் தரும் பணி
                  ஏணியாய் இருக்கும் பணி
                  ஐயங்களைப் போக்கும் பணி
                  ஒற்றுமையை வளர்க்கும் பணி
                  ஓதுவதை உயிரெனக் கொண்ட பணி
                  ஒளவை வழி நடக்கும் பணி
                அதே ஆசிரியப் பணி